/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_28.jpg)
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 படத்தின் படப்பிடிப்பையும் மாற்றி மாற்றி படமாக்கி வருகிறார்.
இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறும் எனக்கூறப்படுகிறது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் 'இந்தியன்' படத்தில் வரும் 'சேனாபதி' கதாபாத்திரத்தின் கெட்டப்பில் கமல் உள்ளார். இப்புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)